Rock Fort Times
Online News

திருச்சி பாலக்கரையில் 50 கடைகளில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்….

திருச்சி பாலக்கரை மேம்பாலத்திற்கு கீழ்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு மற்றும் பருப்புக்கார தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு இருப்பதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் திருச்சி மாநகராட்சிக்கு பொதுமக்கள் தரப்பில் புகார்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி செயற்பொறியாளர் சுந்தரவடிவேல் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகளில் முன்பு இருந்த ஆக்கிரப்புகளை அகற்றினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்