காதின் உள்ளே இருக்கும் அரைவட்ட வடிவ எலும்பின்உட்பகுதியில் திரவம் ஒன்று இருக்கிறது. சில காரணங்களால் இந்த திரவம் பாதிக்கப்படும்போது தலைசுற்றல் உண்டாகும். உதாரணமாக ராட்டினத்தில் சுற்றும்போதோ அல்லது தட்டாமாலை சுற்றும்போதோ தலை சுற்றுவதுபோல் இருக்கும். ஏனென்றால் தட்டாமாலை அல்லது ராட்டினம் சுற்றும்போது அரைவட்ட எலும்பின் உள்ளே இருக்கும் திரவமும் சுற்ற ஆரம்பிக்கும். திடீரென சுற்றுவதை நிறுத்தினால், திரவமும் சுழல்வதை உடனே நிறுத்திவிடும். இதன் காரணமாக காது தூண்டப்பட்டு தலைசுற்றல் உண்டாகும்.