திருச்சி புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை திரு.வி.க நகரை சேர்ந்தவர் சரண்யா. இவர் கடந்த 14 ந் தேதி காலையில் தனது கணவர் பாலாஜி மற்றும் குழந்தையுடன் வேலூரில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தவுடன் தனது ஒன்பதரை பவுன் தங்க நெக்லஸை கழட்டி தனது கைப்பையில் வைத்துள்ளார். பின்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு தனியார் பேருந்தில் ஏறி வண்ணாரப்பேட்டை மதுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். பின்னர் தனது கைப்பையை திறந்து பார்த்துள்ளார். கைப்பையில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் நெக்லஸ் காணாமல் போனதை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.