திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் வட்டார கல்வித்துறை மற்றும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை இணைந்து ஸ்ரீரங்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின . நிகழ்ச்சியின்போது அந்தநல்லூர் ஒன்றிய அனைத்து நடுநிலை பள்ளிகளின் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அந்த நல்லூர் ஒன்றிய வட்டாரகல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றுப் பேசினார். சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அய்யாரப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
வட்டார வள மேற்பார்வையாளர் மீனா நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.