+2 வகுப்பு, மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தோ்வு எழுதிய மாணவா்களை விட, விடுப்பெடுத்த மாணவா்களே அதிகம் என்பதனால் விடுப்பெடுத்த மாணவா்களை மீண்டும் தோ்வெழுத வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இன்று தெரிவிக்கையில்,பள்ளிக்கு குறைந்தபட்ச வருகைப்பதிவு இருந்தால் தான் தோ்வெழுத முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவா்கள் பொதுத்தோ்வு எழுத அனுமதி கொடுக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் வழங்குகிறோம் எனவும், இந்த முயற்சி எல்லாம் மாணவா்களை தோ்வு எழுத வைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.