தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர். சக்திவேல். இவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவை தொகையை பெற்று தர கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகினார். உதவியாளர் வேணுகோபால் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவர்மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் சக்திவேல் புகார் செய்தார்.போலீசார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கு பதிவு செய்து அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்குதிருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேணுகோபாலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம ரூபாய்அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.