திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் பெற்ற லஞ்சப்பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த 1ம் தேதி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். போலீசாருடன் வந்த தமிழ்நாடு ஊழல் தடுப்பு அதிகாரிகளை உள்ளே விட அமலாக்கத்துறையினர் மறுத்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான வழக்கில் , அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.