
மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு கண்ட்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ காலனியில் அமைந்துள்ளது. அவர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. திருச்சி சிவாவின் இல்லத்திற்கு அருகே டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைப்பதற்காக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இன்று (15.03.2023) சென்றுள்ளார் . அப்பொழுது அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா இல்லாமல் மைதானத்தை திறக்க கூடாது என கோஷம் எழுப்பினார்கள். வாக்குவாத்த்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கே.என் நேருவின் ஆதரவாளர்கள் சிலர்., சிவாவின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அவரது டொயோட்டா பார்ச்சுனர் கார் கண்ணாடி மற்றும் வீடு, நாற்காலி இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

