Rock Fort Times
Online News

மழை நின்றதால் இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை- விமான சேவை தொடங்கியது…

மிக்ஜாங் புயல் எதிரொலியாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக மாறியது. அரசியல் கட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற அனைத்து இடங்களிலும் மழை நீர் அதிகளவு தேங்கி நின்றது. புயல் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் நேற்று இரவு முதல் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மழை ஒருபுறம், மின்சார துண்டிப்பு மறுபுறம் என சென்னை மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் மழை ஓய்ந்து சென்னையில் இன்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியது. மழைநீரும் மெல்ல மெல்ல வடிந்து வருகிறது. இதனால், சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இதேபோல சென்னை விமான நிலையத்திலும் தேங்கிய மழை நீரை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அகற்றினர். இதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. விமான சேவை தொடங்கப்பட்டாலும் குறைந்த அளவிலேயே விமானம் இயக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்