மாநில அளவிலான போட்டியில் பதக்கங்கள் வென்ற ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளா்….
திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்...
தமிழ்நாடு காவல்துறையினருக்காக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான Police Duty Meet 2023 சென்னை ஓமனாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த மாதம் 27ந்தேதி முதல் 01.12.2023-ந்தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகரம் காவல்துறை சார்பில் 1 காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 சிறப்பு உதவி ஆய்வாளர் என 4 பேர் கலந்து கொண்டனா். திருச்சி மாநகரத்தில் இருந்து சென்ற காவலா்கள் தடய அறிவியல் , தடய மருத்துவவியல், கைரேகை, சட்ட நுணுக்கங்கள் என 6 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனா். இப்போட்டியில் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் வரை 95 போ் கலந்து கொண்டனா். மேற்கண்ட போட்டிகளில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா, மாநில அளவில் தடய அறிவியலில் பிரிவில் 2-ம் பரிசு , தடய மருத்துவவியலில் 3-ம் பரிசு என மொத்தம் 2 பதக்கங்களை வென்றுள்ளார் . 2 பதக்கங்களை வென்ற இவா் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். திருச்சி மாநகர காவல்துறை சார்பாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதாவை, மாநகர காவல் ஆணையரகத்திற்கு நேரில் அழைத்த காவல் ஆணையர் என்.காமினி ஐபிஎஸ் , வாழ்த்துக்களை தெரிவித்து, வெகுவாக பாரட்டினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.