Rock Fort Times
Online News

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் : தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் அறிக்கை…

திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளா் ப.குமாா் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர், புரட்சிதமிழர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, மக்களுக்காக நான்… மக்களுக்காகவே நான்… என்கிற உயர்ந்த சிந்தனையோடு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து. மறைந்தும் மறையாமலும் நம்மையெல்லாம் வழிநடத்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 5.12.2023 (செவ்வாய்கிழமை) காலை 8.05 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்