Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே நாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுமி படுகாயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீ.பூசாரிபட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமி தன்னுடைய வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் சிறுமியை கடித்துக் குதறவே அவர் சத்தம் போட்டுள்ளார். நாய்கள் கடித்து குதறியதில் சிறுமிக்கு கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனே சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டு உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீ.பூசாரிபட்டி மட்டுமின்றி மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிவதும், பொதுமக்களை கடித்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை இனியும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் இதே போல் சம்பவத்தில் பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்