போலீசாரை குறிவைத்து 40 கிலோ எடையுள்ள கண்ணிவெடியை சாலையில் புதைத்து வைத்த நக்சலைட்டுகள்…..( வீடியோ இணைப்பு )
போலீசார் கண்டுபிடித்து வெடிக்க செய்த போது மிரண்ட பொதுமக்கள்...
தெலுங்கானா மாநிலம் பத்ராதிரி கொத்தகூடெம் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாபுரம் கிராமம் அருகே நேற்று ( 30.12.2023 ) இரவு போலீசார் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் போலீசார் மிகவும் எச்சரிக்கையுடன் சென்றனர். மேலும், சாலையில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளனவா என்று சோதனை செய்து கொண்டே சென்றனர்.
அப்போது போலீசாரை குறிவைத்து ஓரிடத்தில் 40 கிலோ எடை கொண்ட கண்ணிவெடி புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த கண்ணிவெடி வெடித்தால் மிகப்பெரிய சேதம் ஏற்படும் என்று கருதிய போலீசார் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியை பலப்படுத்தினர்.
பின்னர் அந்தக் கண்ணி வெடியை வெடிக்க செய்தனர்.
கண்ணிவெடி வெடித்ததில் சுமார் 40 அடி உயரத்திற்கு அதன் துகள்கள் பறந்தன . இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மிரண்டு போயினர். கண்ணிவெடி வெடித்த இடத்தில் 9 அடி ஆழம், 5 அடி அகலத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது . பின்னர், அந்த பள்ளம் ஜேசிபி எந்திரம் மூலம் சரி செய்யப்பட்டது. சரியான நேரத்தில் போலீசார் கண்ணிவெடியை கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.