Rock Fort Times
Online News

மழையால் சேறும் சகதியுமாக மாறிய சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை அருகே உள்ள முத்துநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே, இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கடந்த 2022 ம் ஆண்டு அப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கீழக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திருவெறும்பூர் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள மண் சாலை மழையின் காரணமாக சேறும் சகதியமாக மாறி உள்ளது. இதனால், இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், முதியவர்கள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் சில சமயம் வழுக்கி விழுந்து விடுகின்றனர்.
ஆகவே, இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க கோரியும், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கீழக்குறிச்சி ஊராட்சி நிர்வாகம் மற்றும் திருவெறும்பூர் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும் இன்று காலை அப்பகுதி மக்கள் சேற்றில் இறங்கி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்குமேலும் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றால் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருவெறும்பூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்