திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 2, 3 மற்றும் 4 ஆகிய வாடுகளுக்கு கூத்தைப்பாரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் குழாய்கள் பல இடங்களில் உடைந்து காணப்படுகின்றன. இதனால், பெரும்பாலான குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை செயல் அலுவலர் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகவே, உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.