நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில், விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் மியாட் மருத்துவமனை தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையால் தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.