Rock Fort Times
Online News

தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவையின் 131 வது நிகழ்ச்சி…

திருச்சி தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவையின் 131 வது நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஹோட்டல் கௌரி கிருஷ்ணாவில் நடந்தது. சிறப்பு விருந்தினராக காவல் துணை ஆய்வாளர் உஷா கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவையின் உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து தன்னம்பிக்கை தரும் திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவையின் உறுப்பினர் லட்சுமணன் எடுத்துக் கூறினார். சோழர்களின் கட்டிடக்கலை பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆர். சாராலட்சுமி எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஆத்மா மனநல மருத்துவமனை டாக்டர் ஜா.கரன் லூயிசின் சிறப்பு பயிலரங்கம் நடந்தது. மேலும், ஈஷா மையத்திலிருந்து வந்த சகோதரி இன்ஜினியரிங் பற்றி உரையாற்றினார். விழாவையொட்டி அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேரவையின் தலைவர் சின்னதுரை, நிறுவனத் தலைவர் ஜே.ராஜா, செயலாளர் துரை.தியாகராஜ் மற்றும் முரளி, ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்