Rock Fort Times
Online News

கார்த்திகை தீப திருநாளையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் நாளை சொக்கப்பனை …

திருச்சி திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. இத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு உரியது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதே போல இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி கார்த்திகை கோபுரம் முன்பு சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகூர்த்தகாலுக்கு சந்தனம், மா இலைகள், மாலைகள் அணிவிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. அப்போது அங்கே விநாயகர் அஸ்திரதேவருடன் சண்டிகேசர் எழுந்தருளினார். முகூர்த்த காலுக்கு , கோவில் யானை அகிலா ஆசிர்வாதம் செய்தது. விழாவையொட்டி நாளை 26ம் தேதி இரவு 7 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. முன்னதாக சாமி சன்னதியிலும், அடுத்து அம்மன் சன்னதியிலும், மூன்றாவதாக குபேர லிங்கேஸ்வரர் சன்னதியிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்