Rock Fort Times
Online News

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான IRCTC இணையதளம் திடீர் முடக்கம்…

ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று ( 23.11.2023 )  காலையிலிருந்து செயல்படவில்லை. சாதாரண முன்பதிவு, தட்கல் முன் பதிவு செய்யக் கூடியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை பயன்படுத்தி தினமும் லட்சக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்கிறார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படாததால் முன்பதிவு செய்யாமல் சிரமப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் விரைவில் சரி செய்யப்பட்டு முன்பதிவு தொடங்கும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்