தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே ‘நான் முதல்வன்’, ‘களத்தில் முதல்வர்’ உள்பட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை மாவட்டம் தோறும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதேபோல, திருச்சி மாவட்டத்திலும் இந்த திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டம் தில்லைநகர் பகுதியில் உள்ள மக்கள் மன்றத்தில் இன்று ( 22.11.2023 ) நடந்தது. இதில், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டு மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பார்வையிட்டதுடன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். முகாமில் பொதுமக்கள் புதிய மின்இணைப்பு, மின்பளு மாற்றம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.