திருச்சி கருமண்டபம் மாந்தோப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன்கள் மகி என்கிற மகேந்திரன் (வயது18), சுகுமார் (17). சுகுமார், திருமணம் மற்றும் மாநாட்டு விழா மேடைகளுக்கு அலங்காரம் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு சகோதரர்கள் இருவரும் கருமண்டபம் குளத்துக்கரையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே சென்ற வந்தே பாரத் விரைவு ரெயில் அவர்கள் மீது மோதியதில் சுகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகேந்திரன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.