திருச்சியில் தனியார் பேருந்துகளில் அதிக இரைச்சலுடன் ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின்பேரிலும், போக்குவரத்து ஆணையரின் அறிவுறுத்தலின்படியும் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் திருச்சி கிழக்கு, மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்கள், துறையூர், முசிறி, லால்குடி, திருவெறும்பூர் கிளை அலுவலக ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பேருந்துகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 75 பேருந்துகளில் நடத்திய சோதனையில் 15 வாகனங்களில் போக்குவரத்து விதிகளை மீறி பயன்படுத்தப்பட்ட 15 ஒலிப்பான்களை பறிமுதல் செய்து, 15 வாகனங்களுக்கும் ரூ. 1.50 லட்சம் அபராதம்விதித்தனர். பேருந்து ஓட்டுநர்கள் சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குமார் தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.