திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னப்பொன்னேரி பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொண்டனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடி கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு 75,000 இரண்டாவது பரிசு 50,000 மூன்றாவது பரிசு 35,000 என மொத்தம் 31 பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,ஜோலார்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் சத்யா சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி,வட்டாட்சியர் சிவபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் காவல்துறை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.