Rock Fort Times
Online News

திருச்சி எஸ்ஆர்சி கல்லூரியில் 127 ஆம் ஆண்டு நிறுவனர் தின விழா…

அமைச்சா் கே.என்.நேரு பங்கேற்பு...

திருச்சி எஸ்ஆர்சி கல்லூரியில் 127 ஆம் ஆண்டு நிறுவனர் தின விழா இன்று ( 30.10.2023 ) கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் கண்ணன் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். அறங்காவலர் பஞ்சாபிகேசன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். இதில் அமைச்சர் பேசுகையில்…

மத்திய அரசாங்கத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிகிடக்கிறது. ஆனால் அந்த வேலைவாப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே வேலை வாய்ப்புகளை தேடி படியுங்கள் என்றார். அதே போல் இந்த கல்லூரி பல்கலைகழகமாக அங்கீகாரம் பெறுவதற்கு முயற்சி செய்து வருகின்றது. நம்முடைய அரசு உங்களுக்கு துணை நிற்கும் என்றார். அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு கேடயங்களும் பரிசுகளும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் காமக்கோடி வித்யாலயா முதல்வர் வெண்மதி, செயலாளர் முத்துசாமி , மேலாளர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் கல்லூரி முதல்வர் வாசுகி, சாவித்திரி வித்யாலயா தலைமை ஆசிரியை சுதா உள்ளிட்டவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்