திருவரங்கம் மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன் ,அந்தபகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.இவர் நேற்று மதியம் கீழ அடையவளஞ்சான் வீதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்க நகைகளை பத்திரமாக வைத்திருக்குமாறு அறிவுரை கூறியுள்ளனா். அப்போது முதியவரிடம் நகைகளை வாங்கி கவனத்தை திசை திருப்பி, ஒரு பொட்டலத்தில் வைத்து கொடுப்பது போல் கொடுத்துள்ளனர்.ஆனால் நகைகளை அவர்கள் பையில் வைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அவர் வீட்டில் சென்று பார்த்த போது நகைகள் இல்லாதது கண்டு விஜயராகவன் திடுக்கிட்டார். உடனே திருவரங்கம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளாா். இவரது புகாாின் போில் காவல்துறை ஆய்வாளா் பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
