தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார்.
சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், தலைவர் ராஜா, செயலாளர் முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில்,மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் இன்றி பள்ளியில் சேர்க்கை செய்யக்கூடாது. தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இலவச சட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தொகையை அரசு வழங்க வேண்டும். நிபந்தனை இன்றி தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்
வழங்கப்பட வேண்டும். அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் சொத்துவரி, மின் கட்டணம், சாலை வரி ஆகியவற்றில் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சங்கங்களின் பொறுப்பாளர்கள், பள்ளி தாளாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கேசன் பாலாஜி நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.