பொதுமக்களின் கோரிக்கையின் பேரில், நாகை துறைமுகத்திலிருந்துஇலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். பின்னர், 50 பயணிகளுடன் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 6,500 ரூபாய் கட்டணமாகும். ஜிஎஸ்டி 18 சதவீதம் சேர்த்து மொத்த கட்டணம் 7,670 ஆகும். ஆனால், முதல் நாள் என்பதால் இதில் பயணம் செய்த பயணிகளுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 2,803 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது நாளான இன்று(15-10-2023) முழு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்தக் கப்பலில் இன்று பயணம் செய்ய 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இன்றைய தினம் இந்த கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இனி திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் இந்த பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.