சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகளுக்கு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை ….
மருத்துவமனை மூத்த நிா்வாகி ஜெயராமன் பெருமிதம்..
இதய பிரச்சினைகளுக்கு உலக தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை அளிப்பதில் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் எலெக்ட்ரோபிசியாலஜி துறை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் என்பது சீரற்ற அதீத இதய துடிப்பு கொண்ட ஒரு நிலையாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு படபடப்பு, மூச்சு திணறல், மயக்கம் அடிக்கடி ஏற்படும். சிலருக்கு பக்கவாதம் வரும் அபாயமும் உள்ளது. இத்தகைய பிரச்சினைகளை குணப்படுத்துவதில் திருச்சி அப்போலோ மருத்துவமனை எலெக்ட்ரோபிசியாலஜி துறை சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக சீரற்ற அதீத இதய துடிப்பால் (AF) அவதிப்பட்டு வந்த ஒரு பெண்ணுக்கு இந்த அதி நவீன சிகிச்சை ( Pulmonary Vein isolatian) அளிக்கப்பட்டு மூன்றே நாட்களில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாா். திருச்சியில் முதல்முறையாக அப்போலோ மருத்துவமனையில் நுண்துளை முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்தப் பெண் குணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மாதங்களில், பல்வேறு இதய பிரச்சினைகளுடன் அனுமதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட நோயாளிகளை இந்த நவீன சிகிச்சை முறையின் வாயிலாக எலெக்ட்ரோ பிசியாலஜி துறை மருத்துவர் டாக்டர் விஜயசேகர் குணமடையச் செய்துள்ளார். அதில் 50க்கும் மேற்பட்டோருக்கு Radiofrequency Ablation என்னும் கதிாியக்க சிகிச்சை மூலம் இதயதுடிப்பு கோளாறுகள் சீா் செய்யப்பட்டுள்ளது.
இதய பிரச்சினைகளை சரி செய்வதிலும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் திருச்சி அப்போலோ மருத்துவமனை உலகத் தரம் வாய்ந்த அதிநவீன எக்ட்ரோபிசியாலஜி சேவைகளை டெல்டா பகுதி மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றி வருகிறது என திருச்சி அப்போலோ மருத்துவமனை மூத்த நிர்வாகி V. ஜெயராமன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சிவம், எலெக்ட்ரோபிசியாலஜி துறை டாக்டர் விஜயசேகர், மூத்த இதயவியல் நிபுணர்கள் டாக்டர் காதர், டாக்டர் ஷியாம் சுந்தர், டாக்டர் ரவீந்திரன், மயக்கவியல் டாக்டர் ரோகிணி மயூர் பாலாஜி, டாக்டர் சரவணன் ஆகியோர் Radiofrequency Ablation செயல் முறைகள் குறித்து விளக்கி கூறினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.