Rock Fort Times
Online News

பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள அ.தி.மு.க.வுக்கு தைரியம் இருக்கிறதா?… -ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.கேள்வி

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீண்டகாலம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். எங்களின் கோரிக்கையை ஏற்று
ஆயுள் சிறைவாசிகள் 49 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். 49 பேரில் ஒருவர் சிறையிலேயே உயிரிழந்து விட்டார்.இதனை கண்டித்தும் உடனடியாக அந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் வரும் அக்டோபர் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.திய நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் எம்.பி தானிஷ் அலியை பார்த்து அவர் இஸ்லாமியர் என்பதால் வெறுப்பு பேச்சை பேசி உள்ளார்.அவரின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் அது தண்டனை ஆகாது. மாறாக, ரமேஷ் பிதூரி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுதி மறு வரையறை செய்த பின்பு தான் மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என கூறி உள்ளார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து தொகுதி மறு வரையறை செய்தால் தென் மாநிலங்களில் தற்போது உள்ள பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். அதற்காக தான் பா.ஜ.க அதை செய்ய துடிக்கிறது. எனவே, மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யாமல் நிலப்பரப்பின் அடிப்படையில் தொகுதி மறு வரையறைசெய்ய வேண்டும்.பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள அதிமுகவுக்கு தெம்பும், தைரியமும் இருக்கிறதா?. இந்தியா கூட்டணியில் இணைய கமல்ஹாசனும் விருப்பம் தெரிவித்துள்ளார் என்றால் அது இந்தியா கூட்டணியின் பலத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்