Rock Fort Times
Online News

திருச்சியில் எலிகள் சுற்றித் திரிந்த “எசன்ஸ்’ கடைக்கு ‘சீல்’…

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை...

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிர் இழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாவட்டத்தில் சவர்மா, கிரில் சிக்கன் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் மற்றும் உணவகத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் சோதனை நடத்த சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்படி, திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கோட்டை அல்லிமால் தெருவில் உள்ள ஒரு எசன்ஸ் மொத்த வியாபார கடையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த எசன்ஸ் சுகாதாரமற்ற முறையிலும், காலாவதி தேதி குறிப்பிடப்படாமலும் இருந்தது தெரிய வந்தது. மேலும், அந்த கடையில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் சுற்றித் திரிந்தன. அதன் பேரில், அந்த எசென்ஸ் கடை மாவட்ட நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்