தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்ட தனி வீடுகளை காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார். அதில் திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 30 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் காணொளி காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா மேடை சரியாக அமைக்கப்படவில்லை, காணொளி காட்சி நிகழ்ச்சியின் போது சரிவர நெட்வொர்க் கிடைக்கவில்லை உள்ளிட்ட காரணங்களுக்காக திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமணியை திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.