திருச்சி உறையூர் சுண்ணாம்பு கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. தென்னக ரெயில்வேயில் புக்கிங் கிளார்க்காக பணியாற்றிய அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதைத் தொடர்ந்து, அவரது மனைவி ஜெயலட்சுமிக்கு கணவரின் பென்சன் தொகை வருகிறது. இதற்கிடையே உறையூர் வண்டிக்கார தெருவில் வசிக்கும் பாலாஜியின் சகோதரர் ஜெயச்சந்திரன் (வயது63), சகோதரி பிரபாவதி (65) ஆகியோர் ஜெயலட்சுமிக்கு சொந்தமான 25 பவுன் நகைகளை அடமானம் வைப்பதற்காக வாங்கியுள்ளனர். மேலும், ரூ. 3 லட்சத்து 97 ஆயிரம் ரொக்க பணத்தையும் கடனாக பெற்றனர் . அது மட்டும் அல்லாமல், பாலாஜியின் பென்சன் தொகையையும் ஜெயலட்சுமி ஏடிஎம் கார்டு மூலம் எடுத்து செலவழித்துள்ளனர்.இந்தநிலையில் குடும்ப தேவைகளுக்காக ஜெயலட்சுமி அடமானம் வைக்க கொடுத்த நகை பணம் மற்றும் ஏடிஎம் கார்டை திரும்ப கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயச்சந்திரன், பிரபாவதி ஆகிய இருவரும் ஜெயலட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி அவரது ஆடைகளை கிழித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயலட்சுமி உறையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.