[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
திருச்சியில் ஹோட்டல்ஸ், ரியல் எஸ்டேட் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது சாமி குரூப் ஆஃப் கம்பெனிஸ். இந்நிறுவனத்தின் சார்பில், திருச்சி அண்ணாமலை நகர் மலர் சாலையில் “விஸ்டேரியா ப்ளூம் ” என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமிபூஜை விழா இன்று (17-09-2023) நடைபெற்றது. இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, திரைப்பட நடிகர் சந்தானம், சாமி குரூப் ஆஃப் கம்பெனிஸின் சேர்மன் இன்ஜினியர் எம்.இளமுருகன், தேன்மொழி இளமுருகன்,
ஜெயம் பில்டர்ஸ் ஆனந்த், விக்னேஷ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் கோபிநாத், சௌடாம்பிகா கல்விக் குழுமங்களின் தலைவர் சத்தியமூர்த்தி, மொராய்ஸ் சிட்டி மொராய்ஸ் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் சந்தானம் செய்தியார்களிடம் பேசுகையில்., திருச்சியில் வெற்றிகரமாக இயங்கிவரும் சாமி குரூப் ஆஃப் கம்பெனிஸ்
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கிடைப்பது போன்ற அனைத்து வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்க இருப்பது மகிழ்ச்சியான செய்தி. சூப்பர் மார்க்கெட், கிரிக்கெட், இறகுப்பந்து மைதானம் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த இன்டோர் விளையாட்டு மைதானம், ஜிம், நீச்சல்குளம், யோகா சென்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இங்கு அமைய உள்ளன. இது திருச்சி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி, மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் என்.காமினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.