Rock Fort Times
Online News

திருச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு…!

Former Chief Minister Karunanidhi's Memorial Day will be observed in Trichy...!

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் திருச்சியில் இன்று ( 07.08.2023 )பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலையில் தொழிலதிபர் கே.என்.அருண் நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் , கட்சி நிர்வாகிகள் விஜயா ஜெயராஜ், மாத்தூர் கருப்பையா, சேர்மன் துரைராஜ், டோல்கேட் சுப்பிரமணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், கண்ணன் போட்டோ கமல், செவ்வந்திலிங்கம், கலைச்செல்வி, சோழன் சம்பத், முத்து, பழனி, வழக்கறிஞர்கள் கவியரசன், அந்தோணி, மணி பாரதி, முகுந்தன், புத்தூர் தர்மராஜ், தொ.மு.ச. குணசேகர், கருணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்கள், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்