Rock Fort Times
Online News

திருச்சியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 4 பேர் கைது…!

திருச்சியை அடுத்த தீரன் நகர் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷே விழாவை முன்னிட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மர்ம மனிதர்கள் 3 பேர் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகத்தினர், சோமரசம்பேட்டை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடி கேமரா பதிவை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதாக திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த சிவானந்தம், சந்தோஷ், அமர்நாத், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்