Rock Fort Times
Online News

பூமிநாதசாமி கோவிலில் அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு…!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான பூமிநாத சாமி கோவில் உள்ளது. இக்கோவிலை பழமை மாறாமல் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். இதையடுத்து ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கோவில் கொடிமரம், உள்பிரகாரம் உள்ளிட்டவற்றை திருச்சி மண்டல இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் பிரகாஷ், நிர்வாக பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் கவுதமன், கோவில் நில அளவை வட்டாட்சியர் கண்ணன், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, மழைக்காலங்களில் கோவிலுக்குள் மழைநீர், சாக்கடை கழிவுநீர் வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்