Rock Fort Times
Online News

ஆடிப்பெருக்கு : திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் குவிந்த பொதுமக்கள்….

திருச்சி மாவட்ட மக்களுக்கு முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவது முக்கொம்பு மேலணை பகுதியாகும். இங்கு சிறுவர்களுக்கான ஊஞ்சல்கள், ராட்டினம், சறுக்கு விளையாட்டு போன்ற விளையாட்டு உபகரணங்கள் உள்ளதால் அரியலூர், பெரம்பலூர், கரூர் போன்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். முக்கொம்பு மேலணையிலிருந்து விளை நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் உள்ளதால் இன்று (03.08.2023) ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்கள் குவிந்தனர்.
புதுமண தம்பதிகளும் அதிக அளவில் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் காவிரி கரையோரம் வாழை இலையில் மஞ்சள், குங்குமம், தேங்காய், பழங்கள் பச்சரிசி உள்ளிட்ட பொருட்களை வைத்து காவிரி அன்னைக்கு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர். பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி புது தாலி கயிறு அணிந்து கொண்டனர். திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் வேண்டி காவிரி அன்னையை வணங்கி மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். பின்னர் முக்கொம்பு முழுவதும் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். தாங்கள் கொண்டு வந்த உணவையும் உறவினர்களோடு அமர்ந்து சாப்பிட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்