ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கொத்தளம் புதூர் மதுரை கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது, ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஜெகதீஷ்(வயது 18), சவுத்ரி (14), சுப்புராஜ்(17) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 2 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டு உள்ளது . மற்ற ஒரு சிறுவனின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.