திறனாய்வு தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்…
திருச்சி மாவட்ட மைய நூலகர் வேண்டுகோள்..
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அரசு சார்பில் நடத்தப்படும் திறனாய்வுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 6-ம் தேதி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ், 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் மாதம் 23-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இத்தேர்வில் (ஆண், பெண் தலா 500 பேர்) மொத்தம் 1000 பேர் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு தலா ரூ.1000 வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். இத்தேர்வில், தமிழ்நாடு அரசு 9 மற்றும 10-ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டு, கொள்குறி முறையில் இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும்.
எனவே, 2024 கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த திறனாய்வு தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை ஆகஸ்ட் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 10 மணிக்கு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர், பள்ளி அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையுடன் பெற்றோருடன் பங்கேற்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சிவகுமாரை, 6383690730 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் பகல் 1 மணி வரை மாவட்ட நூலகத்தில் நடைபெறும். மற்ற நாள்களில் இணைய வழியில் பயிற்சிகள் நடைபெறும். இத்தகவலை மாவட்ட மைய நூலக முதுநிலை நூலகர் சு. தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.