Rock Fort Times
Online News

அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவன்  பலி…

போலீசார் தீவிர விசாரணை ..

திருச்சி  செம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் காமராஜ். இவரது மகன் வில்பட் (வயது 14). இவர் திருச்சி புத்தூரில் உள்ள ஒரு   பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் கடந்த ஒன்றாம் தேதி மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அதில் அனைத்து மாணவர்களுக்கும் சத்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 25 மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வாரம் ஒரு முறை ஒரு மாத்திரை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மாணவனோ கடந்த ஒன்றாம் தேதி பள்ளியில் இருக்கும் பொழுது பத்து மாத்திரையையும் ஒரே நேரத்தில்  சாப்பிட்டதாக
கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய அந்த மாணவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே பெற்றோர் மகனை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ( 04.12.2023 ) சிகிச்சை பலன்இன்றி இறந்து விட்டார். இது தொடர்பாக    உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி  வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்