திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 9 புதிய பேருந்துகள் இயக்கம்… * அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் பிங்க் நிற 9 விடியல் புதிய பேருந்து சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று(06-06-2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் சரவணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிட்., கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி, திருச்சி மண்டல பொதுமேலாளர் சதீஷ்குமார, மத்திய மாவட்ட திமுக செயலாளர். வைரமணி, மாவட்ட பொருளாளர் துரைராஜ், மத்திய மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி ஜெகநாதன், கவிதா செல்வம், ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பால சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், பகுதி செயலாளர் மோகன்தாஸ், வட்டச் செயலாளர் தனசேகர் மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.