ரூ.366 கோடியில் திருச்சி உள்பட தமிழ்நாட்டில் 9 தொழிற்பேட்டைகள்:- எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சிறந்த பட்ஜெட்- * தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ‘மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு
தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று( மார்ச் 14) பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ‘மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு கருத்து தெரிவிக்கையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2025-2026 நிதிநிலை அறிக்கையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 3,915 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது. திருச்சி உட்பட தமிழ்நாட்டின் 9 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியது. வரும் நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 லட்சம் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 25 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்பது சிறப்பான அறிவிப்பாகும். சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும், அது சர்வதேச தரத்தில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் நிறைந்ததாக இருக்கும் என்ற அறிவிப்பு காலத்தின் தேவையறிந்து செய்யப்பட்ட அறிவிப்பாகும். ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம், ஓசூரில் 400 கோடியில் டைடல் பூங்கா, விருதுநகரில் மினி டைடல் பூங்கா, கடலூர், புதுக்கோட்டையில் புதிய தொழிற் பூங்கா, திருச்சியில் பொறியியல் தொழிற்பூங்கா என்பன உட்பட எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட்டாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.