Rock Fort Times
Online News

சுகாதார ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு…

மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு..

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசுகாலனி 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 50). சுகாதார ஆய்வாளர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். பின்னர், வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது 4 பவுன் செயின், 2 பவுன் வளையல், 12 கிராம் தங்க மோதிரம் மற்றும், தங்க நாணயங்கள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் குற்றப்பிரிவு போலீசில் சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர் .

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்