திருச்சி மாநகரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் காந்தி மார்க்கெட் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், வீரசோலை கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவுக்கும், செல்வமலர் கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்திற்கும், இன்ஸ்பெக்டர் கவிதா கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல, கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் இருந்த அருள்ஜோதி காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவுக்கும், கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்தில் இருந்த ஆனந்தி வேதவள்ளி மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், அங்கிருந்த வசுமதி அமர்வு நீதிமன்றம் காவல் நிலைய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் என். காமினி ஐபிஎஸ் பிறப்பித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.