Rock Fort Times
Online News

அவதூறாக பேசிய 2 வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு …!

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது  பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசியது, அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாக பேசியது, திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியது உள்பட 11 வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அதன்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று (2-12-2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு நகரம் மற்றும் கருங்கல்பாளையம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகளில் காவல்துறையால் குற்றம் நிரூபிக்கப்பட்டு ள்ளதால் பெரியார் சிலையை உடைப்பேன் மற்றும் கனிமொழி குறித்து அவதூறாக பதிவிட்ட 2 வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக மேல் முறையீடு செய்ய அவருக்கு 6 மாதம் கால அவகாசம் வழங்கி தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்