Rock Fort Times
Online News

திருச்சி மத்திய மண்டலத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்…

திருச்சி மத்திய மண்டலத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜீயபுரம் ஆய்வாளர் பாலாஜி, மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளராகவும், திருச்சி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் ராமராஜன் ஜெயங்கொண்டத்துக்கும், மங்களமேடு ஆய்வாளர் நடராஜன் ஆண்டிமடத்துக்கும், ஆண்டிடம்  ஆய்வாளர் முத்துக்குமார் அறந்தாங்கிக்கும், அறந்தாங்கி ஆய்வாளர் பிரேம்குமார் அரியலூர் – 2 காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி.கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்