திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் நரியன் தெரு உள்ளது. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளிலும், ஓடு வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கூலி வேலை செய்யும் தங்கமணி என்பவரது வீட்டில் சமையல் செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக குடிசையில் தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்து உள்ள 5 வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் 6 வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பீரோ, கட்டில், மெத்தை மின்விசிறி கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ பற்றியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Comments are closed.