Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதியில் காணாமல் போன 142 செல்போன்கள் மீட்பு…* உரியவர்களிடம் ஒப்படைத்தார் சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ்!

திருச்சி மாநகரப் பகுதியில் பொதுமக்கள் சிலர் தங்களது மொபைல் போன்களை தவற விட்டனர். அவர்கள் காவல் நிலையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பொதுமக்கள் தவறவிட்ட 142 செல்போன்களை மீட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஐ. பி.எஸ். விசாரணை நடத்தி உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். செல்போன்களை பெற்றுக்கொண்ட உரிமையாளர்கள் சிட்டி கமிஷனர் காமினி மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதுதொடர்பாக காவல் ஆணையர் கூறுகையில், செல்போன்கள் காணாமல் போனாலோ, திருடப்பட்டாலோ பொதுமக்கள் பயப்பட வேண்டாம். அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் அல்லது சிஇஐஆர் (CEIR) இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்று கேட்டுக்கொண்டார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்