புத்தாண்டையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக இன்று( டிச.30) முதல் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், புத்தாண்டையொட்டி சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று(டிச.30) 240 பேருந்துகளும், நாளை 255 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப ஜனவரி 3-ந்தேதி 525 பேருந்துகளும், 4-ந்தேதி 765 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.