Rock Fort Times
Online News

நடிகர் எஸ்.வி.சேகர் நடத்தும் நாடக குழுவின் 50-வது ஆண்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு…!

கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் எஸ்.வி.சேகர் நடிகர் மட்டுமின்றி நாடகத் துறையிலும் சிறந்து விளங்குபவர். ‘நாடகப்பிரியா” என்ற பெயரில் 50 ஆண்டுகளாக நாடகக் குழுவை திறம்பட நடத்தி வருகிறார். இந்நிலையில் நாடகக் குழுவின் 50-வது ஆண்டு விழா மற்றும் 7000-வது நாடகவிழா சென்னையில் வருகிற 30-11- 2024 நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவினை தலைமையேற்று நடத்திக் கொடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் நடிகர் எஸ்வி சேகர் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது நாடகக் குழுவின் தயாரிப்பாளர் கிருஷ்ணகுமார் உடன் இருந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்